வவுனியாவில் கார் விபத்தில் ஒருவர் பலி!! அதிகாலையில் சம்பவம்!! (Photos) Share

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இச் சம்பவம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விபத்தில் சம்பவித்த காரில் ஐந்து நபர்கள் பயணம்செய்ததாகவும் விபத்து இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் இறந்த மற்றும் படுகாயமடைந்த இருவர்களைத் தவிர ஏனையோர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விபத்துக்கான காரணம் என்பவற்றை சரியாக உறுதிப்படுத்த முடியவில்லையென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..