நீதியை நிலைநிறுத்துவதற்காக தன் கையை வெட்டிய பாண்டியன் போல... Share

பொற்கைப் பாண்டிய மன்னன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இவ்விடத்தி லும் பொற்கைப் பாண்டியன் பற்றி முன்னர் பிரஸ்தாபித்திருந்தோம்.

 
 
ஆகையால் அந்த மன்னன் தொடர்பான கதையை இவ்விடத்தில் தவிர்க்கலாம்.
இரவுப் பொழுதில் குறித்த வீதியில் உள்ள வீட்டுக் கதவுகளைத் தட்டியதற்காக தனக்குத் தானே தண்டனை கொடுத்தவன் பொற்கைப் பாண்டியன்.
 
நீதி என்றால் அதில் நமர், பிறர் என்ற பேத மைக்கு இடமேயில்லை. நீதி வழங்குகின்ற நானே தவறு செய்தாலும் அதற்குரிய தண் டனை உண்டென்பதை உலகத்துக்கு நிரூபித் துக் காட்டியவன் பொற்கைப் பாண்டியன்.
 
எனவே நீதி என்று வந்துவிட்டால் உறவுக் கும் தான் சார்ந்த இனத்துக்கும் மொழிக்கும் முன்னுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.
ஆக, பொற்கைப் பாண்டியன் போல நீதி வழங்குவதற்கு அரசாட்சித் தலைவர்கள் முன் வரவேண்டும்.
 
இப்போது நாட்டில் மிகப்பெரும் பிரச்சினை களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தி வரு வது, மத்திய வங்கியின் பிணைமுறி விவகார மாகும்.
முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாராளுமன்றத்தில் மிகப்பெரும் களேபரத்தை ஏற்படுத்திய விவகாரமாக பிணைமுறியைக் குறிப்பிட முடியும்.
என்ன நடக்கும்? ஏது நடக்கும். நல்லாட்சி யின் ஆயுள் முடிந்து விடுமோ என்றெல்லாம் எண்ணுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஓர் உறுதிமொழியைத் தந்துள்ளார்.
 
அதில் பிணைமுறி விவகாரத்துடனும் ஊழ லுடனும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்சி பேத மின்றி உச்ச தண்டனை வழங்கப்படும் என்ப தாக அவரின் உறுதிமொழி அமைந்துள்ளது.
ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் கூறவேண்டி யதை உரிய நேரத்தில் உரியவாறு கூறியிருப் பது வரவேற்கத்தக்கது.
அதேவேளை பிணைமுறி விவகாரத்தில் கட்சி பேதமின்றி உச்ச தண்டனை வழங்கப் படும் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வன்னி யுத்தத்தில் நடந்த போர்க்குற்ற விவகாரத்தில் மட்டும் போர்க்குற்ற விசாரணை இடம்பெற மாட்டாது; படையினர் எவரும் தண்டனைக்குட்படமாட்டார்கள் என்று கூறுவது ஏன் என்பது புரியவில்லை.
 
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் மனித சமூகம் அதிர்ந்து போயிருக்கும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் போர்க்குற்ற விசாரணை இடம்பெற மாட்டாது; படையினருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது எனக் கூறுவதற்குள்,
தான் சார்ந்த சிங்கள இனத்துக்கும் அழிந் தது தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு நீதி வழங்கத் தேவையில்லை என்ற நினைப்பும் ஜனாதிபதி மைத்திரியிடம் மேலோங்கி உள் ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எதுவாக இருந்தாலும் பொற்கைப் பாண்டிய மன்னன்போல ஜனாதிபதி மைத்திரி செயற்பட வேண்டும்.
 
பிணைமுறி மோசடிக்கு கட்சி பேதம் பாரா மல் உச்ச தண்டனை கொடுக்க முன்வந்தது போல வன்னியில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் இனபேதமின்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உச்சதண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்கள் ஜனாதிபதியிடம் விடுக்கும் கோரிக்கை.
Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..