நுணாவில் சந்தியில் இறங்கி வீட்டுக்கு சென்ற இளைஞர் மீது தாக்குதல் Share

யாழ்ப்பாணம் நுணா­வில் சந்­தி­யில் இறங்கி வீட்­டுக்கு நடந்து சென்ற­வரை வழிமறித்த இரு­வர் கொட்டன்களாலும் கைகளா­லும் சரமாரி­யா கத் தாக்­கி­விட்டு தப்பியோடியுள்­ள­னர்.

 

தாக்­கு­த­லுக்கு இலக்­கான இளை­ஞர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நுணாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மட்­டு­வில் மத்­தி­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒருவர் பொங்­க­லுக்­காக கொழும்பிலிருந்து வந்துள்­ளார்.

அவர் நுணா­வில் சந்­தி­யில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற வேளை­யில் அவரைக் கடந்து சென்ற மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற இரு­வர் திரும்­பி­ வந்து கொட்டன்களாலும் , கைக­ளா­லும் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்­ள­னர் எனத் தெரிவிக்கப்பட்­டது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..