சென்னையில் சினிமாப் பாணியில் கொடூரம்!! கணவன் கழுத்தில் கத்தி வைத்து மனைவி, தங்கை கற்பழிப்பு!! Share

சென்னை வியாசர்பாடியில் கணவன் கழுத்தில் கத்தியை வைத்து அவரது மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது. நாளுக்கு நாள், கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் ஒருவரது கழுத்தில் ரவுடிகள் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த நபரின் மனைவி மற்றும் தங்கையை ரவுடிகள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதில் ஈடுபட்ட நான்கு ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது கணவன் கழுத்தில் கைத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..