ஆண் வேடமிட்டு 3 இளம்பெண்களை திருமணம் செய்த பெண்ணின் பரபரப்பு வாக்கமூலம் (photos) Share

ஆண் வேடமிட்டு 3 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை ஆந்திர மாநிலம் கடப்பா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

 

கடப்பா மாவட்டம், காசிநாயன மண்டலம், இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி (21). இவர் சிறு வயதிலிருந்தே தன்னை ஆண் போல் பாவித்து சட்டை, பேண்ட் அணிந்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது தலைமுடியையும் அவர் ஆண்களைப் போலவே வெட்டிக் கொண்டி ருந்திருக்கிறார்.

இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்குச் சென்ற ரமாதேவி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, அங்கு தன்னுடன் பணிபுரியும் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ரமாதேவியை பெண் என்று தெரியாமலேயே சாந்தியும் காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில், ரமாதேவி ஆண் இல்லை ஒரு பெண்தான் என்பது சாந்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சாந்தி, இதுகுறித்து தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சாந்தியின் பெற்றோர் ஜம்மலமொடுகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சாந்தியை மீட்டதுடன் ரமாதேவியை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், சாந்தி மட்டுமின்றி கடப்பா மாவட்டம் பீமகுண்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம்பெண்களையும் ஆண் என ஏமாற்றி ராமதேவி திருமணம் செய்தது தெரியவந்தது. பெண்ணாக இருந்து கொண்டு பெண்களையே திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன? என போலீஸார் கேட்டதற்கு, “எனக்கு ஆண்களைப் பிடிக்கவில்லை என்றும், எனவேதான், ஆண் போல வேடமிட்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்”. என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு இரண்டு முறை ரமாதேவி மயக்க மருந்து கொடுத்ததாக போலீஸாரிடம் சாந்தி கூறியதால், அவரை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக ஜம்மலமொடுகு அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். ரமாதேவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு பெண்ணை பெண்ணே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image may contain: 1 person, selfie and close-up

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..