போலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு!! இனி உண்மையான புகைப்படம் அவசியம்!! Share

போலி பேஸ்புக் கணக்குகளை வைத்துள்ளவர்கள் தொடர்பாகவும், அவர்களை கண்டறிவதற்கும் பேஸ்புக் புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

அதன்படி பேஸ்புக் கணக்குகளை வைத்துள்ளவர்களிடம் அது அவர்களின் உண்மையான கணக்கா? அல்லது போலியானதா? என்பதற்காக, பாவனையாளரின் உண்மைப் புகைப்படத்தினை பேஸ்புக் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், குறித்த பாதுகாப்பு உறுதிச்செயற்பாட்டிக்கு பின்னர் பாவனையாளரின் புகைப்படமானது நிரந்தரமான அழிக்கப்பட்டுவிடும் எனவும் பேஸ்புக் உறுதியளித்துள்ளது.இதன்மூலம் போலிக்கணக்குகளை முடக்கும் செயற்பாடுகளில் பேஸ்புக் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கணக்கு ஆரம்பிப்பது, நட்பு கோரிக்கை அனுப்புவது போன்ற செயற்பாடுகளின் போது இந்த புகைப்பட உறுதி கட்டாயமாக்கப்படும்.

மேலும், இந்தநடவடிக்கையின் மூலம் போலி கணக்குகளை வைத்து ஏமாற்றுபவர்கள் மற்றும்இ சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களை அடையாளம் கண்டு அந்த கணக்குகள் நீக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..