கடற் கொந்தளிப்பு!! கிளாலிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதம்!! Share

கனத்த மழை, கடும் காற்றுக் காரணமாகக் கிளாலிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று படகுகள் சேதமடைந்துள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கடற்கரைக்
கிராமமான கிளாலிக் கடற்கரையில் நேற்றுமுன்தினம் காலை  நிறத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று
படகுகள்  கடும் மழை மற்றும் பலத்த காற்றுக் காரணமாக ஒன்றுடன் ஒன்று  மோதி
விபத்துக்குள்ளாகின.

இதனால் மூன்று படகுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனக் கடற்தொழிலாளர் சங்கத் தலைவர்
இராஜ இராஜேஸ்வரன்  தெரிவித்தார்.

அந்தப் படகுகளைச்  சீரமைப்பதற்கான ஏற்பாடுகளைப் படகின் உரிமையாளர்கள் தற்போது
மேற்கொண்டுள்ளனர்.  இது போன்ற சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளன எனச் சங்கத் தலைவர்
மேலும்  தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..