உன்ர வாழைப்பழம் சின்னன் !! என்ர வாழைப்பழம் பெரிசு!! யாழில் சம்பவம்!! (Video) Share

கோப்பாய், நீர்வேலி, கரந்தன் என வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சின்ன வயசில ஆண்டு 3 படிக்கேக்க நடந்த சம்பவம் ஒன்றை பெரிய பள்ளிக்கூடத்தில படிக்கேக்க வகுப்புக்குள்ள இருந்து நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.

அந்த நேரத்தில் பொருளாதாரத் தடை. கோதுமை மாவைப் பார்ப்பதற்கே பெரியபாடு. பாண் வாங்குவதற்கு நீண்ட வரிசை யில் மக்கள் காத்திருப்பார்கள். அந்த நேரத்தில் வெளி மாவட்டங்களுக்கு வாழைக்குலைகள் கொண்டு செல்லப்படாததால் வாழைப்பழம் தேடுவாரில்லாமல் இருந்திச்சு. கிலோ 2 ரூபாவுக்கு விற்பனையான சம்பவங்களும் உண்டு. கப்பல் வாழைப்பழத்திற்கு மட்டும் கொஞ்சம் மரியாதை இருந்திச்சு.

இப்படியான நேரத்தில் விடியவில கியுவில நின்டு வாங்கிற பாணோட வீட்ட கட்டித் தொங்க விட்டிருக்கிற கதலி இல்லாட்டி இதரை வாழைக்குலையில் இருந்து நல்ல பழமா புடுங்கி சாப்பிடும் போது அமுதமாத்தான் இருக்கும். சில நேரம் பள்ளிக்கூடத்துக்கும் பாணும் வாழைப்பழமும் பேப்பரில சுத்திக் கொண்டு போய் வைச்சு சாப்பிடுறது வழக்கம்.

இப்புடி ஒரு நாள் சாப்புட்டுக் கொண்டிருக்க வாழைப் பழம் தொடர்பா ஆராய்ச்சி வந்திட்டுது. அப்ப இரண்டு பேர் கொண்டு வந்து வைச்சிருந்த இதரை வாழைப்பழங்களையும் இன்னொருவன் கொண்டு வந்து வைச்சிருந்த கதலி வாழைப்பத்தையும் வைத்து ஆராய்ச்சி தொடங்கியது.

அப்போதுதான் ஒருவன் சொன்னான் ”வாழைப்பழங்களை  இப்பிடி வைச்சிருக்கும் போது மாறிவிடும்.  உன்ர வாழைப்பழம் சின்னன், என்ர வாழைப்பழம் பெரிசு. பிறகு மாத்திப் போடாதை என்டு”.

அந்த நேரத்தில பக்கத்து வகுப்பில இருந்த ஆண்டு 9 படிச்ச பெடியலுக்கு இந்த கதை காதில கேட்டுட்டுது. ”ஆரடா உங்க வாழைப்பழங்களை வைச்சு அளந்து பாக்கிறது” என்டு அந்த வகுப்பில இருந்து சத்தம் வந்திச்சு. அந்த வகுப்பில இருந்த பொம்பிளைப் பிள்ளைகளும் ”கொல்” என்டு சிரிச்சுதுகள்.

அந்த நேரம் ஆண்டு 3 படிச்ச எங்களுக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்டு விளங்கேல..... பிறகுதான் விளங்கிச்சு அவர்கள் வாழைப்பழம் தொடர்பாக “டபிள் மீனிங்கில“ கேட்டு சிரிச்சிருக்கிறார்கள் என்டு.

இன்டேக்கு புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியால வரேக்க இந்த வாழைத் தோட்டத்தில வாழைக்குலையை வெளிமாவட்ட வியாபாரிகள் தோட்டத்துக்குள்ள வைச்சு விலைக்கு வாங்கிறதை கண்டவுடன ஓடிப் போய் வீடியோ எடுத்திட்டன்...

அந்த நேரம் கிலோ 2 ரூபா வித்த கதலி வாழைப்பழம் இப்ப 140 ரூபா விக்குது. இதரையும் நல்ல விலை போகுது.

தோட்டக்காரரும் இப்ப ஏன் சீதனம் கூடக் கேக்கிறாங்கள் என்டு இப்பத்தான் விளங்கிச்சு. வாழைப்பழம் இந்த விலை வித்தால்...... கூட கேப்பாங்கள்தானே!!! ....

நன்றி

முகப்புத்தகம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..