யார் இவன்?? Share

யார் இவன்??? சில காலமாய் நானும் சிந்தித்துப் பார்க்கிறேன்


இவன்
சிறுபிள்ளையா? இல்லை
சிறுபட்டியா?
சிறிதும் புரியவில்லை எனக்கு.
ஆபத்தான ஆட்டங்களை
அலேக்காக ஆடும் இவன்
சில பொழுதுகளில்
ஆடிப் போவதையும் காண்கிறேன்
நானறிந்த வகையில்
நல்லவனாக காணும் இவன்
என்னோடு மட்டும் ஏனிப்படி
ஏட்டிக்குப் போட்டியாய்?
எதுவும் விளங்கவில்லை.
இவன்
எதிரியா இல்லை
என்னுயிர் நண்பனா?
அழகனாய்
அப்பாவியாய் தோன்றும்
இவன் மன ஆழத்தினை
அளக்க முடியவில்லை
அகவியல் படித்த என்னால்
இவன் மனம்
குழந்தையாக இல்ல குரங்கா?
இவனிடம் ஞானமும் கண்டேன்
 அஞ்ஞானமும் கண்டேன்
அன்பினால் இவனை ஆளலாம் என்றும் அறிந்து கொண்டேன்
கொண்டவள் மீதும்
குழந்தைகள் மீதும்
கொள்ளை பிரியம்
கொண்டவன் இவன்.
குறும்புகளிற்கும் குறைவில்லாத ஆள்
சிந்தனை சிறந்ததாக இருப்பினும் சில பலவீனங்களும் இவனிடம்.
சீண்டி விட்டால் ஆடும் குரங்காக ஆகும் குணங்கண்டு
ஆனந்தம் கொள்வர் இவன் எதிரிகள்
சில நேரம் இது எனக்கும் சாதகமாய்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..