சைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா!! Share

உடல்களின் சேர்க்கை மட்டுமே காதல் என்று உலகமே கொள்ளும் காலமிது உன்னத காதலின் உயர்வது பற்றி யாருக்கு புரியும்


கத்திமேல் நடக்கும் பயணம் போல் காதலும் காமமும் சேர்ந்தது தானே காதலிக்கும் பருவம்
உள்ளங்களின் உரசலில் தோன்றிய எம் காதல் காமத்தின் தூறல்கள் துளிகூட இல்ல என பொய்யுரைக்கவில்லை நான்
முதலில் பார்வை மட்டுமே போதும் என்று தோன்றியது. .
பின்பு பேசணும் நாள் பூராகவும் போல மாறிச்சு
பேசாத நொடிகளில் பேசிய காலங்களின் அசை மீட்டலாக ஆகிச்சு.
கண் விளித்த நேரம் முதல்
கண் உறங்கும் நேரம் வரை காதலரின் நினைவலைகள் நெஞ்சினிலே..
கனவில் கூட காதலன் திருமுகம்
காலத்தின் நகர்வில் பார்வையிலும் பேச்சிலும் மட்டும் பசி தீரா உணர்வு
அருகிலிருந்து அளவளாவுவதில் புதிய ஆனந்தம்
கை பற்றி கதை பேசும் கோணங்களில் மகிழ்ச்சி
சின்ன சண்டைகளின் முடிவில் சிறு கையணைப்பு காதலைப் பேசியது
சைக்கிள் முன் பாறில் ஏறிச் செய்த பயணங்கள் காலமெல்லாம் தொடராதா என ஏங்க வைத்தது
இருட்டோடு விளையாடிய பொழுதுகளில் கிடைத்த சில இதழொற்றல்கள்
காமத்துள் தான் என்றால் ஏற்றுக் கொள்கிறேன்
பலவந்தமாக கிடைத்த பரிசுகள் அவை என்றாலும் உரியவர் அவர் மட்டுமே என்ற உணர்வால் உதறி விட முடியவில்லை என்னால்
எட்டி விடும் தூரத்தில் எல்லாமே இருந்தும் தொடாமல் இருப்பது ஒரு சுகம்
தொட விடாமல் தவிக்க வைப்பது பரம சுகம்
இது இரண்டையும் அனுபவித்தவள் நான்

பௌனியா

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..